அஜீத் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் `விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதும் அஜர்பைஜானில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் அஜீத் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான `குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படப்பிடிப்பில் அஜீத்தின் அறிமுக பாடல் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் `விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹைதராபாத்தில் மீண்டும் `குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே இந்தப் படத்தில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் சந்தானம், சூரி, சதீஷ் உட்பட சில காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாகிவிட்டதால் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி மட்டுமே காமெடி நடிகர்களாக நடித்து வருகின்றார்.
அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி தற்போது `குட் பேட் அக்லி’ படத்தின் இணைந்துள்ளார். அதோடு, அஜீத்துடன் கிங்ஸ்லி முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– தேஜேஷ்