Take a fresh look at your lifestyle.

9-வது படத்தில் நடிக்கத் துவங்கிய கவின்!

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ‘கிஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கான வெளியீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ‘தண்டட்டி’ பட இயக்குனர் ராம் சங்கையா இயக்குகிறார்.

இந்த நிலையில், கவினின் 9-வது படத்தின் பூஜையும் இன்று (ஜூலை – 16) நடைபெற்றுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ தொடரை இயக்கிய கென் ராய்சன் இப்படத்தை இயக்க, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் இணைந்துள்ள பிற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.