Take a fresh look at your lifestyle.

‘கல்கி 2989 ஏ.டி’ படத்தின் டீசர் வெளியீடு!

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்டப் படமாக உருவாகும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில், படத்தின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்ட படக்குழு அமிதாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவித்துள்ளது.

அதன்படி அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

– தேஜேஷ்