Take a fresh look at your lifestyle.

அஜித்துக்கு ஜோடியாகும் தெலுங்கு கதாநாயகி!

நடிகர் அஜித் – திரிஷா நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

மேலும் இப்படத்தின் கதாநாயகியாக தெலுங்கு கதாநாயகி ஸ்ரீ லீலா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

– தேஜேஷ்