Take a fresh look at your lifestyle.

38 வயதில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த கங்கனா!

நடிகை கங்கனா ரணாவத், தமிழில் ‘தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2’ படங்களில் நடித்துள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வாகி உள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு தற்போது 38 வயது ஆகிறது.  இந்நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?  என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கங்கனா ரணாவத், “எல்லோருக்கும் ஒரு துணை அவசியம். எனக்கும் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது.

துணையுடன் வாழ்வது கஷ்டம். துணை இல்லாமல் வாழ்வது அதைவிட கஷ்டம். ஆனாலும் உங்கள் துணையைத் தேடித் தேடி கண்டுபிடித்தால் அது உங்களுக்கு பேரழிவாக இருக்கலாம்.

எனவே திருமணம் என்பது இயல்பாக தானாகவே நடக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு காலக்கெடு இல்லை. எல்லா இந்திய பெற்றோர்களையும் போல, எனது பெற்றோரும் என்  திருமணம் பற்றி கவலைப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில், தான் ஒருவரை காதலிப்பதாக கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.