மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஹபீபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ போன்ற படங்களை இயக்கிய மீரா கதிரவன் தற்போது ‘ஹபீபி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் புதுமுகங்களை நடிக்க வைத்துள்ளார்.
இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஹபீபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி வழங்கும் முதல் தோற்றப் போஸ்டரை நேற்று வெளியிடுள்ளார்.
இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய மீரா கதிவரன், “இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதைச் சாத்தியப்படுத்த 20-வருடமாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.