Take a fresh look at your lifestyle.

பொங்கல் ரிலீசுக்குத் தள்ளிப்போன ‘கேம் சேஞ்சர்’!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்த ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘கேம் சேஞ்சர்’.

கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன்னர் ‘இந்தியன்-2’படத்தை ஷங்கர் ஆரம்பித்தபோது, கேம் சேஞ்சர் படம் குறித்த எந்த சிந்தனையும் அவரிடம் இல்லை.

பல்வேறு காரணங்களால், இந்தியன் தாமதமானதால் கேம் சேஞ்சர் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.

ஒரே நேரத்தில் இந்தியன்-2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை டைரக்ட் செய்தார். இந்தியன் படம், பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியது.

கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, முழுப்படமும் ‘ரெடி’யாகி விட்டது.

வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார்.

இந்தப் படம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ‘கேம் சேஞ்சர்’ திரைக்கு வர இருப்பதாகத் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

“டிசம்பர் மாதம் படத்தை வெளியிட வேண்டாம்.

சங்கராந்தி பண்டிகையின் போது ரிலீஸ் செய்யுங்கள் என விநியோகதஸ்தர்கள் கேட்டுக்கொண்டதால் ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்கிறேன்.

வேறு காரணங்கள் ஏதும் இல்லை” என தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.