Take a fresh look at your lifestyle.

‘வேட்டையன்’ டப்பிங் பணிகளைத் துவங்கிய துஷாரா!

ஜெய்பீம் படத்தின் மூலம் வனம் பெற்ற இயக்குநராக மாறினார் த.செ. ஞானவேல். தற்போது, ரஜினிகாந்த்தை வைத்து ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதில் நடித்துள்ள துஷாரா விஜயன் ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக மாறிய துஷாரா விஜயன், பின்னர் அதே பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது, கவுதமராஜ் இயக்கிய கழுவேத்தி மூர்கன், வசந்த பாலன் இயக்கிய அநீதி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா, அண்மையில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திலும் நடித்துள்ளார்.

ராயன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், துஷாரா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.