Take a fresh look at your lifestyle.

தனுஷ் பட டைட்டிலுக்கு வந்த சிக்கல்!

படத்தின் கதைகளுக்குச் சொந்தம் கொண்டாடும் காலம் மெல்ல, மெல்லக் குறைந்து, அண்மைக்காலமாக ‘டைட்டில்’களுக்கு உரிமைக் கொண்டாடும் போக்கு அதிகரித்து வருகிறது. ‘லேட்டஸ்டாக’ சர்ச்சையில் சிக்கி இருப்பது தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்.

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குபேரா’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தத் தலைப்புக்கு தெலுங்குத் தேசத்தில் இருந்து சிக்கல் வந்துள்ளது. அந்தத் தலைப்புக்கு உரிமைக் கொண்டாடுகிறார், கரிமகொன்ட நரேந்தர் என்ற தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர். இவர் இயக்குநரும் ஆவார்.

தெலுங்கு செய்தியாளர்களிடம் நரேந்தர், பக்கம் பக்கமாக கூறிய புகார் பட்டியலின் சுருக்கம், இது:

‘தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘குபேரா’ என்ற தலைப்பை நான் பதிவு செய்துள்ளேன். எனது ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில்தான் தனுஷ் – நாகார்ஜுனா நடிப்பில் ‘குபேரா’ என்ற பெயரில் படம் தயாராவது எனக்குத் தெரிய வந்தது.

‘குபேரா’ தலைப்பை சேகர் கம்முலா மாற்ற வேண்டும் – அல்லது எனக்கு நஷ்டஈடு தர வேண்டும் – இந்த விவகாரத்தில் திரைப்பட வர்த்தசபை தலையிட்டு எனக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்’ என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார் நரேந்தர்.

அவரது குற்றச்சாட்டு குறித்து பேசிய குபேரா இயக்குநர் சேகர் கம்முலா, “இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. ஒருவேளை சமரச பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்பதும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார் 

– பாப்பாங்குளம் பாரதி.