மகேந்திரன் தன்னுடைய முதல் படமான முள்ளும் மலரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அசோக் குமாரை அணுக, பின் ஏதோ சூழலில் பாலு மகேந்திரா ஒப்பந்தமானார்.
அவரின் இரண்டாவது படமான உதிரிப் பூக்களுக்கு பாலுமகேந்திராவை அணுக, அவர் தன்னுடைய இயக்கத்தில் அழியாத கோலங்களில் பிஸியாக இருக்க, உதிரிப் பூக்களுக்கு அசோக் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
உதிரி பூக்களில் தொடங்கிய அவரின் தமிழ் படங்கள் முறையே உல்லாச பறவைகள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, கை கொடுக்கும் கை, ஈர விழி காவியங்கள், யாரோ எழுதிய கவிதை என வளர்ந்து கடைசியாக மலபார் போலீஸ் வரை சுமார் 38 படங்கள் ஒளிப்பதிவில் காவியமாக்கப்பட்டன.
இதில் தமிழில் உள்ளம் கவர்ந்த கள்வன், அன்று பெய்த மழையில் என இவருடைய ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் வெளியான படங்களானது ஒளிப்பதிவுக்காகவே பார்க்கப்பட்ட படங்களானது.
இதில் இந்திய சினிமாவின் முதல் 3D படமான மை டியர் குட்டிசாத்தான் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும் இவரே.
கண்களை கேமிராவாக்கி காட்சிகளை கவிதையாக்கிய ஒளிப்பதிவு மேதை அசோக் குமாரின் நினைவு தினம் அக்டோபர் 22.



