‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம், 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்டது.
படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி வெளியிட்ட நிலையில் படத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்கு வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் படம் குறிப்பிட்ட தேதியிலிருந்து தள்ளிப் போவதாகவும், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாகவும் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் பொங்கலுக்கு ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.சி-ன் அரண்மனை-4 ஆகிய படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
– தேஜேஷ்
