Take a fresh look at your lifestyle.

பாலிவுட் ஜாம்பவான் படங்களை முறியடித்த ‘ஸ்ட்ரீ-2’!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரத்தா கபூர். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று அமர் கௌஷிக் இயக்கத்தில் வெளிவந்த ‘ஸ்ட்ரீ – 2’ திரைப்படம்.

ஹாரர் கலந்த ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வசூலில் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இதில் ஸ்ரத்தா கபூருடன் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் தற்போதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.700 கோடி வசூலித்தது. மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பதான், ஜவான் மற்றும் பிரபாஸின் பாகுபலி-2 உள்ளிட்ட இந்திப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து, அதிக வசூல் செய்த இந்திப் படமாக ‘ஸ்ட்ரீ-2’ படம் மாறியது.

இதுகுறித்து அண்மையில் ஸ்ரத்தா கபூர் அளித்த நேர்காணல் ஒன்றில், இந்தப் படத்தைக் பற்றிக் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், ‘ஸ்ட்ரீ-2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே கவனம் பெற்றதைப் பார்க்கையில் பெருமையாக உள்ளது.

இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் ரசிகர்களுக்கு நல்ல வெற்றிப் படம் கொடுக்க விரும்புகிறேன்.

நான் ஷாருக்கானின் மிகப் பெரிய ரசிகை அவரைப் பார்த்து தான் சினிமாவில் வளர்ச்சி அடைந்தேன்.

‘ஸ்ட்ரீ-2’ படம், இந்தப் படம் அந்தப் படங்களில் வசூல் சாதனையை முறியடுத்தைப் பற்றி சொல்கிறீர்கள்.

என்னைப் பொருத்த வரை எந்தவொரு படம் வந்தாலும் அது நன்றாக வருவது இந்தி திரையுலகிற்கு  தான் நல்லது என தெரிவித்துள்ளார் ஸ்ரத்தா கபூர்.