Take a fresh look at your lifestyle.

ஓ.டி.டி.யில் வெளியாகிறது ஆர்யாவின் ‘தி வில்லேஜ்’!

நடிகர் ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ என்ற இணையத் தொடரில் திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், ஜான் கோக்கன், வி. ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி (Deeraj Vaidy) மற்றும் தீப்தி கோவிந்தராஜன் (Deepthi Govindarajan) ஆகியோரின் எழுத்தில் உருவான இந்தத் தொடரை ஸ்டூடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்த தொடரானது, உலகெங்கிலும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் வரும் 24-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Amazon Prime) வெளியாகிறது.

தமிழில் வெளியிடப்படுவதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

– தேஜேஷ்