Take a fresh look at your lifestyle.

இயக்குனராகும் சாய் பல்லவி!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் சாய்பல்லவி. கார்கி படத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் படத்தில் நடிக்கிறார்.

அமீர்கான் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மூலம் இந்திக்கும் போகிறார். நிதிஷ் திவாரி இயக்க உள்ள ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க உள்ளார்.

இது பான் இந்தியா படமாக உருவாகிறது. தென்னிந்திய நடிகைகளில் தனித்துவமான நடிப்பின் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் சேர்த்து வைத்துள்ளார். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதாக சாய் பல்லவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், “எனக்கு டைரக்டராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதற்காக ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். அந்தப் படத்தை தயாரிக்கப் போவது யார் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் முடிவானதும் அறிவிக்கிறேன்” என்றார்.

– நன்றி தினந்தந்தி