Take a fresh look at your lifestyle.

தாய்லாந்தில் ‘தளபதி-68’ படக்குழு!

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தளபதி – 68 படத்தின் அப்டேட்டை அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வழங்கினார்.

நடிகர் விஜய்யின் 67-வது படமான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த லியோ படத்தின் வெற்றி விழா கடந்த நவம்பர் 1-ம் சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் 25-வது படைப்பாக தளபதி – 68 உருவாகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, நடிகர் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தற்காலிகமாக தளபதி – 68 என வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்றது.

அதற்கான வீடியோவை விஜயதசமியை அன்று வெளியிட்டு, ரசிகர்களை படக்குழு குஷிப்படுத்தியது.

இந்நிலையில் தளபதி – 68 படக்குழு படப்பிடிப்புக்காக படக்குழு சமீபத்தில் தாய்லாந்து சென்றது.

தாய்லாந்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நேற்று படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பிறந்தநாள் கொண்டாடுவதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாகவும், தளபதி – 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

– தேஜேஷ்