1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தபோது சிவாஜி கணேசன் கேஷூவலாகப் படப்பிடிப்புக் குழுவினருடன் புன்சிரிப்புடன் இருக்கும் படம்.
“தாண்டவக்கோனே” பாடலில் “கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே.
பணப்பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே” என்று சிதம்பரம் ஜெயராமனின் குரலுக்கு உடல்மொழியால் நடிக்கும் காட்சி படமாக்கப் பட்டபோது எடுக்கப்பட்ட கேஷூவலான புகைப்படம்.
பராசக்தி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கமலாவுடன் சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்தது.
அதன்பிறகு அதே ஆண்டு அக்டோபரில் சிவாஜி ஜோடியாக திருச்சியில் பார்த்த படம் “பராசக்தி”.