Take a fresh look at your lifestyle.

அக்டோபர் 1-ல் ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘குஷி’!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சிவா நிர்வாணா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்திருக்கும் காதல் கதையான ‘குஷி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கபடிக் குழு கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Netflix) வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது. ஓடிடியிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்