தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதைக் குறைத்தார்.
தற்போது மீண்டும் பிசியான நடிகையாக மாறத் துடிக்கிறார். புதிய படங்களில் தொடர்ச்சியாக நடிக்கிறார்.
பட விழாக்களிலும் கவர்ச்சியான உடைகளில் தென்படுகிறார்.
இதற்கிடையில் சினிமாவில் ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதிய வித்தியாசம் மிகப் பெரியது என்றும், அவை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள காஜல் அகர்வால், “சினிமாவில் ஊதியப் பாகுபாடு இருக்கிறது. அதேவேளை மாற்றங்களும் மெதுவாக நடந்து வருகின்றன.
இப்போது சினிமா கார்ப்பரேட் மயமாகிவிட்டது. ஆனாலும் நடிகர் – நடிகை இடையேயான ஊதிய வித்தியாசம் பெரியது. இந்தப் போக்கு மாறவேண்டும்.
நடிகர்களைப் போல நடிகைகளுக்கும் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
பாலிவுட் சினிமா தாண்டி தென்னிந்திய சினிமாவில் எனக்கு நிறைய சவுகரியம் உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு மரியாதை நல்லமுறையில் அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
காஜல் அகர்வாலின் கோரிக்கை தமிழ் சினிமாவில் செவிமடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.