எஸ்.பி. பொன் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கும் படம் ‘ஃபிளாக்’.
ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வர உள்ளது.
படத்தொகுப்பு வரதராஜன், இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்.
இப்படத்தில் கொட்டுக்காளி, இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும் தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த், பெங்காலியைச் சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தை படமாக்கி உள்ளோம்.
10 வயது சிறுவன் தீஹான் தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். ஒரு முக்கிய சூழ்நிலையில் அவன் டெல்லிக்கு புறப்படுகிறான்.
ஆனால், அவன் வழி தெரியாமல் இந்தியா முழுக்கப் பயணிக்கிறான். ஒரு கட்டத்தில் தீவிரவாதக் கூட்டத்திலும் பயணிக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக காவல் துறையிடம் மாட்டிக் கொள்கிறான். ஏன் டெல்லி நோக்கி பயணித்தான், அவன் உன்மையில் தீவிரவாதிதானா இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்த ‘ஃபிளாக்’ படம்” என்கிறார்.