Take a fresh look at your lifestyle.

வெளியீட்டுக்குத் தயாரான ரஜினியின் ‘ஜெயிலர்-2’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரூ.600 கோடிக்கும் மேல் வசூலும் குவித்தது.

முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘ஜெயிலர்-2’ படம் தயாராகி இருக்கிறது.

முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஜெயிலர்-2’ இம்மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் தொழில்நுட்பப் பணிகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. செப்டம்பரில் திரையிடலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் ‘ஜெயிலர்-2’ படத்தை தீபாவளி விருந்தாக, அதாவது நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டு வரலாமா? என படக்குழுவினர் யோசிக்கிறார்களாம்.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.