Take a fresh look at your lifestyle.

ஆகஸ்டில் வெளியாகிறது சூர்யாவின் அடுத்த படம்!

‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாயி சவுஜன்யா தயாரித்துள்ளனர்.

மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் பற்றிய புதிய ‘அப்டேட்’ வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த படம் ஆகஸ்டு 14-ந்தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.