இந்தியில் ‘நாகினி’ என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் மவுனிராய். இந்தி மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் இந்த சீரியல் மூலமாக ரசிகர்களை ஈர்த்தார்.
தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார்.
இந்த நிலையில், மவுனிராய் தனது காதல் கணவர் சூரஜ் நம்பியாரை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலளித்துள்ள மவுனிராய், “ஆமாம். அது உண்மை தான். நாங்கள் பிரிந்துவிட்டோம்” என தெரிவித்துள்ளார். ஆனால் பிரிவுக்கான காரணத்தை சொல்லவில்லை.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மவுனிராயிடம், ‘திருமண பந்தத்தை முறித்த காரணத்தை சொல்லுங்கள்’ என்று கேட்கப்பட்டது.
இதற்கு காட்டமாக பதிலளித்த மவுனிராய், ‘என் தனிப்பட்ட வாழ்க்கையை ரொம்ப யாரும் ஆராய வேண்டாம். எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை கவனியுங்களேன்’ என்று கூறிச் சென்றார்.