Take a fresh look at your lifestyle.

சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன்!

நடிகை சாவித்திரி

“பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்குச் சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்துப் பெண்கள் வெளியே போனபோது, “பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்குத் தங்கையாகப் பிறக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டே போனார்கள்.
 
சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய நடிப்புத் திறனால் பெண்களை இப்படி நினைக்க வைத்ததில் எனக்கு வியப்பில்லை.
 
ஆனால், அந்தப் படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்த எனக்கே அந்த எண்ணம் உருவானது என்றால் அவரது ஆற்றலை என்னவென்று சொல்வது.
 
அவரது தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்”.
 
– நடிகை சாவித்திரி..!
 
  • நன்றி முகநூல் பதிவு: