கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’.
இதில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், விநாயகன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன் லால் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ரூ. 500 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
‘ஜெயிலர்’ முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் நெல்சன் திட்டமிட்டு இருந்தார். மீண்டும் இதே கூட்டணியில் ஜெயிலர் – 2 திரைப்படம் உருவாகுகிறது.
இந்நிலையில் ‘ஜெயிலர் – 2’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பைப் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் அவரது போர்ஷனில் நடித்து முடிக்க போகிறார். அதன் உடன், ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.