Take a fresh look at your lifestyle.

மார்ச் 21-ல் வெளியாகும் ஹாரர் படமான ‘பேய் கொட்டு’!

அறிமுக இயக்குநர் எஸ்.லாவண்யா இயக்கி இருக்கும் திரைப்படம் ‘பேய் கொட்டு’ (Pei Kottu). இந்தப் படத்தில் கதையின் நாயகியாக லாவண்யா நடித்துள்ளார்.

இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சினிமாத் துறையில் உள்ள 32 துறைகளையும் இயக்குநர் லாவண்யாவே கையாண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இஎப்எக்ஸ், விஎப்எக்ஸ், எஸ்எப்எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் உள்ளிட்ட 32 கிராப்டுகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.

இத்திரைப்படம் மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.