Take a fresh look at your lifestyle.

‘கேம் சேஞ்சர்’: சம்பளத்தைக் குறைத்த ஷங்கர், ராம் சரண்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர். கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக வரும் 10 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

தெலுங்கு சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, இதனை வெளியிட்டார்.

‘கேம் சேஞ்சர்’ நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது. நட்சத்திரங்களில் ‘கால்ஷீட்’ உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தேதிகள் அடிக்கடி மாற்றப்பட்டன. பட்ஜெட் நீண்டுகொண்டே போனது. இதுவரை 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

இதனால் தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கு நிறைய நஷ்டம். அவருக்கு உதவும் வகையில் ராம் சரணும் ஷங்கரும் சம்பளத்தைக் குறைத்தே வாங்கியுள்ளனர்.

வழக்கமாக வாங்கும் ஊதியத்தில் பெரும் தொகையை குறைத்துக்கொண்டு ரூ. 65 கோடி மட்டுமே ராம் சரண் பெற்றுள்ளார்.

ஷங்கர், இந்தப் படத்துக்கு 35 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி உள்ளார்.

ஊதியத்தை குறைத்துள்ள ராம் சரணுக்கு, அதனால் பெரிய இழப்பு ஏதும் இல்லை.

‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் கைவசம் இரண்டுப் படங்கள் உள்ளன.

ஒரு படத்தை, புச்சிபாபு சனா இயக்குகிறார்.

ராம் சரண் ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிமாக இந்தப் படத்துக்கு ‘RC 16’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்னொரு படத்தை ‘புஷ்பா’ புகழ் சுகுமார் டைரக்டு செய்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.