Take a fresh look at your lifestyle.

பொங்கல் ரேஸில் இணைந்த ‘காதலிக்க நேரமில்லை’!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில்  உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம், டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படத்தின் முதல் பாடலான “என்னை இழுக்குதடி” என்ற பாடல் நவம்பர் 22-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

யூடியூப்பில் மட்டும் இந்தப் பாடல் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.