Take a fresh look at your lifestyle.

“நான் பண்ணதிலேயே பெரிய தப்பு…”!

மறக்க முடியாத வசனம்

இயக்குநர் மகேந்திரன் 1979-ல் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம்.

அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.

நீச்சல் தெரியாத விஜயனை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தண்டிப்பதற்காக, நீருக்குள் இறக்க முடிவு செய்வார்கள்.

ஆற்றங்கரை. சில்லென்று ஓடும் ஆறு. கரையில் நிற்கும் தன் இளைய மகளையும், மகனையும் அணைத்து முத்தமிட்டு விட்டு, நீருக்குள் இறங்கும்போது விஜயன், கரையில் கோபத்துடன் நிற்கும் மக்களைப் பார்த்துச் சொல்வார்.

“இத்தனை நாளும் நான் கெட்டவனா இருந்தேன். நீங்க நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இப்போ, உங்களையும் என்னை மாதிரி ஆக்கிட்டேன்.

நான் பண்ணதிலேயே பெரிய தப்பு இது தான்”. சொல்லிவிட்டு ஆற்றுக்குள் படிப்படியாக இறங்குவார்.

கொஞ்ச நேரத்தில் ஆற்றுக்குள்ளிலிருந்து குமிழிகள் மேலெழும்பும். காட்சி நிறைவடையும்.