சமீபத்தில் தான் பார்த்த இரண்டு திரைப்படங்கள் பற்றி நெகிழ்ந்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார் எழுத்தாளர் வண்ணதாசன்.
அந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்…
2003 முதல் 2006 வரை, சாம்ராஜ் அனுப்பும், பரிந்துரைக்கும் படங்களைப் பார்ப்பதற்கென்றே விடுமுறை நாட்களின் பிற்பகலை வைத்திருந்தேன்.
வாழ்க்கை இசையிலிருந்து என்னை அப்புறப்படுத்தியது போல, படங்களில் இருந்தும் துப்புரவாக அகற்றிவிட்டது.

மடிக்கணினியில் CD Drive உம் அற்றுப் போன நிலையில் படம் பார்ப்பதில் இருந்து வெகுதூரம் வந்தாயிற்று.
நீண்ட, மிக நீண்ட இடைவெளிக்குப் பின், நேற்று முன்தின, நேற்றைய இரவுகளில் உள்ளொழுக்கும், மெய்யழகனும் பார்க்க வாய்த்தது.
தனிப்பட்ட வகையில், இந்த இரண்டு தினங்களின் மனநிலையில், இந்த இரண்டு படங்களும் எனக்குத் தேவையாக இருந்தன. எனக்கு உதவின என்றுகூடச் சொல்லலாம்.
நன்றி: முகநூல் பதிவு