Take a fresh look at your lifestyle.

20 கோடிப் பார்வையாளர்களைக் கடந்த ‘தாய்க் கிழவி’ பாடல்!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் – நித்யா மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.  இப்படம் ரசிகர்களின் மனதை வென்று வசூலும் குவித்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

அண்மையில் இந்தப் படத்திற்கு நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேசிய விருதைப் பெற்றார்.

இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள ‘தாய்க் கிழவி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘தாய்க் கிழவி’ பாடல் தற்போது யூடியூப்பில் 20 கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை வீடியோ மூலம் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.