Take a fresh look at your lifestyle.

உலகின் அழகான நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன்!

உலகளவில் அழகிகளைத் தேர்வு செய்ய மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேல்டு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது 2023-ம் ஆண்டுக்கான அழகிகளை தேர்வு செய்துள்ளனர். அதில் உலகளவில் அழகான 10 நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோன் 91.22% மதிப்பெண்களுடன் உலகின் 9-வது அழகான பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியப் பிரபலமும் இவர்தான். இதனை இந்தியத் திரையுலகிற்கு பெருமையான விஷயம் என அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். 

2006-ல் ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமானார் தீபிகா படுகோன். இதையடுத்து ஷாருக்கானுடன் ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற இந்திப் படத்தில் நடித்து பாலிவுட்டில் முன்னணில் கதாநாயகியாக உயர்ந்தார்.

அதைத் தொடர்ந்து ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

அதன்பின் அனைத்துப் பிரபலங்களுடன் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வந்தார். அந்த வகையில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தற்போது தீபிகா படுகோனேவுக்கு 36 வயது ஆகிறது.  

முதல் 10 அழகிகள் பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஜோடி கோமர் முதல் இடத்திலும், ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் புகழ்பெற்ற ஜெண்டையா இரண்டாம் இடத்திலும், பெலா ஹடிட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

கிம் கார்டாஷியன், ஜெவுர்டன், பாடகிகள் பியான்சே, ஆரியானா கிராண்டே, டெயிலர் ஸ்விப்ட் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.