Take a fresh look at your lifestyle.

கே.பாலசந்தரின் மேடை நாடகத்தில் நடிப்பது என்பது வரம்!

நடிகை ரேணுகாவின் அனுபவம்

ஆரம்ப நாட்களில், கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ ‘இருட்டில தேடாதிங்க’, மற்றும் ‘நள்ளிரவில் பெற்றோம்’ போன்ற நாடகங்களில் நடித்தேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, KB சார் (கே.பாலசந்தர்) எழுதி, இயக்கிய ‘பௌர்ணமி’ நாடகத்தில் கதையின் நாயகியாக நடித்தேன். இந்த நாடகம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு, பத்திரிகை, ஊடகங்களில் சிறந்த மதிப்பீடுகளையும் பெற்றது.

நாடகம் தொடங்குவதற்கு முன் கே.பி சார் மூன்று மாதங்கள் பயிற்சி அளித்தார். அவரின் இயக்கத்தில் மேடையில் நடிப்பது ஒரு அருமையான, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

ஒருமுறை, கே.பி. சாரின் சிஷ்யன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பௌர்ணமி’ மேடை நாடகத்தைக் காண வந்தபோது எடுத்த படம்.

நன்றி: ரேணுகா முகநூல் பதிவு.