Take a fresh look at your lifestyle.

திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் சிறுகதை!

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’.

இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசியப் பிரிவின்கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.

பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் இதுதான் முதன்முறை.

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள அங்கம்மாள் படத்தை, என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்சாய் சாமுவேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’க்கு புதிய உருவத்தைத் தரும் விதமாக ‘அங்கம்மாள்’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ மிகப்பெரிய அளவில் அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் பெற்ற சிறுகதை.

இந்தக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. மேலும், பல உலக திரைப்பட விழாக்களுக்கும் சென்றுள்ளது.