‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர் இயக்குநர் மிஷ்கின்.
2006-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நரேன், பாவனா ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைகளத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிக்க முடியாத இயக்குநரானார் மிஷ்கின். அத்துடன் ‘நந்தலாலா’ படத்தை இயக்கியதுடன் இதில் இவரே நாயகனாகவும் நடித்தார்.
இறுதியாக, உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
இதையடுத்து, ‘பிசாசு – 2’ படத்தை எடுத்தார். ஆனால், இப்படம் இரண்டு ஆண்டுகளாகியும் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
தற்போது, விஜய் சேதுபதியை வைத்து ‘டிரைன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் சவரக்கத்தி, மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், மிஷ்கின் கதாநாயகனாக மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை, ‘ரைட்டர்’ படத்தின் உதவி இயக்குநரான கோகுல் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகிறார். இப்படத்தி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.