பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம். இந்தத் தொடர் 9 எபிசோடுகளைக் கொண்டுள்ளது.
இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்தத் தொடர் உள்ளது.
இதையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
அதன்படி, தற்போது இந்தத் தொடரின் 2-வது சீசன் உருவாகி வருகிவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், டிசம்பர் 26-ம் தேதி இந்தத் தொடர் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தத் தொடரின் 2-வது சீசனின் சிறப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தத் தொடரின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இந்தத் தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.