Take a fresh look at your lifestyle.

வைரலாகும் வேட்டையன் பட “ஹண்டர் வண்டார்” பாடல்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170-வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துவிட்டார்.

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

இப்படம் உலகளவில் அடுத்த மாதம் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மனசிலாயோ’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தில் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இரண்டாவது பாடலான ‘ஹண்டர் வண்டார்’ வெளியாகி இதுவும் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.