Take a fresh look at your lifestyle.

சவாலான வேடங்களில் நடிக்க விருப்பம்!

அனுபமா பரமேஸ்வரன்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர், தமிழில் தனுஷுடன் ‘கொடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘தள்ளிப்போகாதே’, ‘சைரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் சினிமா அனுபவங்களைக் குறித்து பேசிய அனுபமா பரமேஸ்வரன், “வித்தியாசமான வழிகளில் செல்லும் பயணம் புதிய அனுபவங்களை கொடுக்கும்.

திருப்தியையும் தரும் அதுபோல் சினிமாவிலும் குறிப்பிட்டக் கதாபாத்திரங்களுக்குள் முடங்காமல் வித்தியாசமான வேடங்களில் நடிக்கவும், புதிய முயற்சிகளில் இறங்கவும் விரும்புகிறேன்.

எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் எனக்கு சவாலான வேடம் இருக்கிறதா? என்று தேடுவேன். சவாலான வேடங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம்.

படப்பிடிப்பில் இயக்குநர் ரீடேக் கேட்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் இன்னும் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலை அந்த வார்த்தை எனக்குள் ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.