Take a fresh look at your lifestyle.

ஜூலை 8-ல் வெளியாகும் ‘வணங்கான்’ டிரைலர்!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இயக்குநர் பாலாவின் ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் ‘வணங்கான்’ படத்தின் டீசர், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வரும் ஜூலை 8-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.