சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்தை பிரேம்குமார் இயக்கம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு தற்போது `மெய்யழகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போஸ்டரில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சைக்கிளில் செல்வது போல் இருப்பதை அடுத்து இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் அரவிந்த்சாமி, சைக்கிள் பின்னால் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் கார்த்தி இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
கோவிந்த வசந்தா இசையில், மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இந்தப் போஸ்டரின் பின்னணியில் தஞ்சாவூர் பெரிய கோவிலின் புகைப்படம் இருப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
– தேஜேஷ்
#இயக்குநர்_பிரேம்குமார் #Director_Premkumar #சூர்யா #Surya #மெய்யழகன் #Meiyazhagan #கார்த்தி #Karthi #அரவிந்த்சாமி #Aravindsamy #ஸ்ரீ_திவ்யா #Sri_Divya #ஃபர்ஸ்ட்லுக் #Firstlook #போஸ்டர் #Poster #2டி_என்டர்டெயின்மென்ட் #2D_Entertainment #மகேந்திரன்_ஜெயராஜூ #Mahendiran_Jayaraju #கோவிந்தராஜ் #Govindaraj #கோவிந்த_வசந்தா #Govinda_Vasantha
–