Take a fresh look at your lifestyle.

வைரலாகும் த்ரிஷாவின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ!

நடிகை த்ரிஷா தற்போது அஜித்துடன் `விடாமுயற்சி’ மோகன்லாலுடன் `ராம்’, கமல்ஹாசன் உடன் `தக்லைஃப்’ சிரஞ்சீவி உடன் ‘விஸ்வாம்பரா’ மற்றும் டொவினோ தாமஸ் உடன் `ஐடெண்டிட்டி’ ஆகிய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் த்ரிஷா கடந்த நான்கு நாட்களாக ரிகர்சல் செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரிவித்துள்ளார். இதில் அவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா உள்பட படக்குழுவினர்களுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

`தக்லைஃப்’ படத்தின் பாடல் காட்சி விரைவில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக பிரமாண்டமான சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இந்தப் பாடலின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

`தக்லைஃப்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, சிம்பு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளதை அடுத்து இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.

– தேஜேஷ்

#தக்_லைஃப் #Thug_Life #நடிகை_த்ரிஷா #Actress_Trisha #சிம்பு #Simbhu #கமல்ஹாசன் #KamalHaasan #அபிராமி #Abirami #நாசர் #Nasar #அலி_ஃபைசல் #Ali_Fazal #பங்கஜ்_திரிபாதி #Pangaj_Thiripathy #அசோக்_செல்வன் #Ashok_Selvan #ஜோஜு_ஜார்ஜ் #Joju_George #ஐஸ்வர்யா_லட்சுமி #Aishwarya_lakshmi #வையாபுரி #Vaiyapuri