Take a fresh look at your lifestyle.

அஜீத்தின் பிறந்தநாள் ரீ-ரிலீஸில் இணைந்த தீனா!

தமிழகத்தில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் பிரபலமடைந்து வரும் நிலையில், தற்போது அஜீத் குமாரின் படங்களும் இந்த ரேஸில் சேர உள்ளன.

தளபதி விஜய்யின் ‘கில்லி’ ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீஸ் ஆனது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது அஜீத்குமாரின் கிளாசிக் ஹிட்களான ‘பில்லா’ மற்றும் ‘தீனா’ ஆகியவை மே 1 ஆம் தேதி பிரமாண்டமான மறுவெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

‘பில்லா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதே பெயரில் விண்டேஜ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். 2007-ல் வெளியான இந்தப் படம் அஜீத்குமார் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

முன்னதாக 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தீனா’ படம் அஜித்துக்கு ‘தல’ என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. இப்படம் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸின் முதல் முயற்சியாகும்.

இந்த இரண்டு படங்களுக்கு அஜீத்குமார் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அமைய உள்ளது.

– தேஜேஷ்