Take a fresh look at your lifestyle.

ஆணழகனாக மாறிய ஆர்யா!

நடிகர் ஆர்யா கடந்த ஆண்டு இருந்த உடற்கட்டு புகைப்படத்தையும் இந்த ஆண்டு உடற்கட்டு புகைப்படத்தையும் வெளியிட்ட நிலையில் இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா ஹீரோக்கள் கேரக்டருக்காக தங்கள் உடலை வருத்தி வொர்க்கவுட் செய்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் ஆர்யா ‘சார்பாட்டா பரம்பரை’ படத்திற்காக குத்துச்சண்டை வீரன் போலவே மாறிய நிலையில் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக ஆணழகன் போலவே மாறி உள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஒரே வருடத்தில் அவர் நிஜ ஆணழகன் போலவே மாறிவிட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளதைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

இந்தப் படம் நிச்சயம் ஆர்யாவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

– தேஜேஷ்