Take a fresh look at your lifestyle.

காதல் மனைவிக்கு கேக் ஊட்டிய அஜித்!

நடிகர் அஜித் ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ஷாலினியை காதலித்து கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணமாகி 24 ஆவது திருமண நாள் விரைவில் வர இருக்கும் நிலையில் திடீரென இருவரும் தனியார் ரிசார்ட் ஒன்றில் ஒருவருக்கொருவர் மாறி மாறி கேக் ஊட்டிக்கொண்டனர்.

அஜித், ஷாலினியிடம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்திய தினம் என்பதால் அதனை கொண்டாடவே அஜித் ஷாலினிக்கும், ஷாலினி அஜித்துக்கும் கேக் ஊட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

– தேஜேஷ்