Take a fresh look at your lifestyle.

இன்னும் முன்பதிவு தொடங்காத அயலான்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை தவிர அனைத்து திரைப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதில், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் 1, விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்கள் பொங்கலுக்கு வரவுள்ளன.

அதற்கான முன்பதிவுகள் தொடங்கின. ஆனால் அயலான் படத்தின் முன்பதிவு நாளை மாலைக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்