Take a fresh look at your lifestyle.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!

நடிகர் ரஜினியின் 172வது படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஞானவேல் இயக்கத்தில் 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் 171வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினியின் 172வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கவுள்ளதாகவும், அதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

– தேஜேஷ்