Take a fresh look at your lifestyle.

என் திரைவாழ்வை மாற்றியவர் எம்.ஜி.ஆர்!

- நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, அண்மையில் நடித்த படம் ‘போலா சங்கர்’. இந்தப் படம் தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும்.

அண்ணன் – தங்கை சென்டிமென்ட்டை வைத்து தமிழில் உருவாகி வரவேற்பை இந்தப் படம் தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மெஹர் ரமேஷ் இயக்கிய திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் 156-வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். குறித்து சிரஞ்சீவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. படத்தில் நான் நடிக்கும்போது முன்பு அதிகப்படியான டேக் எடுப்பேன். அப்போது பிலிம் வீணாகுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிப்பர்.

அப்போது, ஒரு நாள் தன்னிடம் எம்.ஜி.ஆர். அதிக டேக் எடுப்பது பார்ப்பவர்களுக்கு தெரியாது. அதனால், தங்களின் பெஸ்டை கொடுங்கள் என்றார். இது என் திரை வாழ்க்கையையே மாற்றியது என சிரஞ்சிவி கூறியுள்ளார்.

– நன்றி: டி.டி.என். சினிமா