Take a fresh look at your lifestyle.

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே செய்யாமல் இருப்பது ஏன்?- அந்த கிரிக்கெட் வீரர் காரணமா, நடிகை கௌசல்யா ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் 90களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை கௌசல்யா.

எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார், வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த கௌசல்யா பிறகு சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி இருந்தார், அப்போது உடல் எடை பல மடங்கு கூடி ஆளே அடையாளம் தெரியாதவர் போல் இருந்தார்.

அதற்கு காரணம் கௌசல்யாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது எடுத்துக் கொண்ட மருந்துகள் தானாம்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை கௌசல்யா பேசும்போது, திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவிற்கு ஒரு சரியான நபரை நான் பார்க்கவில்லை பின்பு எப்படி திருமணம் செய்ய முடியும்.

ஒருவேளை நான் எதிர்ப்பார்க்கும் ஒரு நபரை சந்தித்திருந்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசித்து இருப்பேன். சினிமாவில் இருந்த விலகி இருந்தபோது நான் கிரிக்கெட் வீரரை காதலித்ததாகவும் பின் Breakup ஆனதாக செய்திகள் எல்லாம் வந்தது.

நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அதிகமாக என்னுடைய பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்து விட்டேன், நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது, அதுபோல அவர்களைப் பிரிந்து என்னால் இருக்கவும் முடியாது.

இதுவும் ஒரு காரணமாக இருந்தது என கூறியுள்ளார்.