Take a fresh look at your lifestyle.

வர்மா விமர்சனம்

396

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் வர்மா. த்ருவ் விக்ரமை வைத்து பாலா அந்த படத்தை ரீமேக் செய்தார். தன் மகனின் முதல் படத்தை பாலா தான் இயக்க வேண்டும் என்று விக்ரம் விரும்பியதால் நடந்தது. ஆனால் படத்தை எடுத்து முடித்த பிறகு சரியில்லை என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து கிரிசாயாவை வைத்து ஆதித்ய

ஆதித்ய வர்மாவை பார்த்தவர்கள் வர்மா எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். இந்நிலையில் ஓடிடியில் வெளியாகியுள்ள வர்மா படத்தை பார்த்தவர்கள் இது பாலா படமா என்று நொந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வேளை வர்மா படம் 3 மணிநேரம் ஓடவில்லை. இரண்டு மணிநேரத்தில் முடித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. ஆதித்ய வர்மாவை 1.5 எக்ஸ் வேகத்தில் யூடியூபில் பார்த்தது போன்று இருக்கிறது. சொந்தக் கதையை இயக்குவதற்கு பெயர் போன பாலா வர்மா படத்தில் இது நடந்தது, அது நடந்தது, அதன் பிறகு மற்றொன்று நடந்தது என்று வரிசையாக காட்சிகளை காண்பித்துள்ளார்.

ஒரு ரயிலில் அமர்ந்து கொண்டு மற்றொரு ரயிலை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. படத்தில் இருந்து எதுவும் நம் மனதில் பதியவில்லை.

அர்ஜுன் ரெட்டி போன்று இல்லை வர்மாவின் கதாபாத்திரம். வர்மாவை சிறு வயதில் இருந்து வளர்க்கும் பணிப்பெண்ணான பவானி (ஈஸ்வரி ராவ்) அவருக்கு ஒரு தாய் போன்று இருக்கிறார். அர்ஜுன் ரெட்டி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் புத்திமதி சொல்ல பாட்டி இருப்பார். இதில் அந்த வேலையை பவானி செய்திருக்கிறார். பவானி கதாபாத்திரம் மட்டும் தான் ஒழுங்காக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் இசையமைப்பாளர் ராதன் தான் வர்மாவுக்கும் இசையமைத்துள்ளார். ஆனால் அந்த இசை கவரும் வகையில் இல்லை. வர்மா புதிதாக தெரியவில்லை. அர்ஜுன் ரெட்டியின் சொதப்பல் வெர்ஷனாக இருக்கிறது வர்மா.

நடிகர்கள் தேர்வு மிகவும் மோசம். மோசமான திரைக்கதையால் நடிகர்களால் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை. மேகா சவுத்ரியை இந்த படத்தில் நடிக்க வைக்காமல் இருந்திருக்கலாம். அவருக்கும், த்ருவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி என்பது சுத்தமாக இல்லை. ரைசா வில்சன் கதாபாத்திரம் பெயருக்கு உள்ளது.

த்ருவ் சில காட்சிகள் அனுபவசாலி போன்று தெரிகிறார், சில காட்சிகளில் புதுமுகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. வர்மா- நல்ல வேளை தியேட்டரில் வெளியாகவில்லை.