Take a fresh look at your lifestyle.

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

136

சென்னை:

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பு “சரக்கு” என்கிறார் மன்சூர் அலிகான்.

மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் – மகேஷ்.டி, இசை சித்தார்த் விபின், திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், எடிட்டிங் எஸ்.தேவராஜ் ஸ்டண்ட் சில்வா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!