சென்னை:
திரு அல்லு அரவிந்த் அவர்களால் துவக்கப்பட்டு தமிழில் 100% பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா OTT தளம், தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை கொண்டுள்ளது. ஆஹா, தமிழ் மக்களின் பொழுதுபோக்கிற்காக இயங்கி வரும் ஒரு பிரத்யேக தளமாகும்.
பேட்டைக்காளி வலைத்தொடரின் சிறப்புத் திரையிடலை காண, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வருகை தந்திருந்தார். பேட்டைக்காளியைப் பார்த்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, இதை ஒரு படமாக கருத முடியாது. பேட்டைக்காளி ஒரு வாழ்வியல். பல்லாயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவுவது தமிழரின் மரபு. பிற்காலத்தில் விஜயநகர பேரசரர்களின் ஆட்சி காலத்தின் போது மாட்டுக்கொம்பில் சல்லியைக் கட்டும் வழக்கம் இருந்ததால், ஜல்லிக்கட்டு என்று பேர் வந்தது. பேட்டைக்காளி மிகவும் சிறப்பாக பிரமாண்டமாக எல்லாரும் பார்த்து பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது. இயக்குனர் ல.ராஜ்குமார் மிகவும் சிரமப்பட்டு கடும் உழைப்போடு ஜல்லிக்கட்டு மாடுகளையும் வீரர்களையும் ஒருங்கிணைத்து இப்பேட்டைக்காளியை உருவாக்கியிருக்கிறார். திரையில் மாடுகள் குத்தி தூக்கி வீசும் காட்சிகளை பார்க்கும் போது வியப்பாக பிரம்மிப்பாக இருக்கிறது. ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திருப்போம் ; ஆனால் திரையில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. பேட்டைக்காளி ஒரு அருமையான பதிவு.
ஒளிப்பதிவு, பிண்ணனி இசை மிகவும் பொருந்தி இருக்கிறது. கிஷோர், வேலராமூர்த்தி, கலையரசன், பாலஹாசன் நடிப்பு ரசிக்கும் வகையில் உள்ளது. ஆஹா தமிழ் OTT இதை வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குனர் ல.ராஜ்குமார் மிகவும் சிறப்பாக படைத்திருக்கிறார். பாராட்டுகள் ! வாழ்த்துகள் !
கிஷோர் மேய்க்கும் நாட்டு மாடுகள் காட்சிகளை ஒருங்கிணைத்து எடுக்கும் கஷ்டம் எனக்கு நல்லாவே தெரியும். எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க. பேட்டை க்காளி மாடு வித்தியாசமாக இருக்கிறது; நன்றாக நடித்தும் இருக்கிறது. இயக்குனருடைய உழைப்பு திரையில் நன்றாக தெரிகிறது. அதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. இயக்குனர் ல.ராஜ்குமாருக்கு உளமாற பாராட்டுக்கள் ! தம்பி வெற்றிமாறனுக்கும் பாராட்டுக்கள்!
எல்லா மக்களும் இந்த பேட்டைக்காளிக்கு கண்டிப்பாக ஆதரவும் பாராட்டும் கொடுப்பாங்க என்று நம்புகிறேன். வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
வாரம் ஒரு புதிய திரைப்படம், ஒரு புது வெப் சீரிஸ் என பல அசத்தலான நிகழ்ச்சிகளை வெளியிட்டு தமிழ் மக்களை மகிழ்விக்கும் ஆஹா OTT தளத்தில், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்களால் கொண்டாடப்பட்ட சர்தார், மிரள், ட்ரிகர் மற்றும் டைரி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன. அன்மையில் வெளியான ஆஹா ஒரிஜினல் படைப்பான பேட்டைக்காளி மற்றும் ரத்தசாட்சி பார்வையாளர்களிடையே பேராதரவை பெற்று வருவதை ஒட்டி ஆஹாவின் மற்றொரு ஒரிஜினல் திரைப்படமான உடன்பால் ஆஹா OTT தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.